இந்தியப்பெண் அபார வெற்றி அமெரிக்காவில் தெற்கு கரோலினா

Indianorigin-politicians-look-strong-in-US-election-race_அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலில் இந்தியப் பெண் நிக்கி ஹாலே அமோக வெற்றி பெற்றார். அவர் தனது பதவியை தக்க வைத்தார்.

இந்தியப் பெண் நிக்கி ஹாலே

அமெரிக்காவில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களுடன் 36 மாகாணங்களின் கவர்னர் பதவிக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நிக்கி ஹாலே (வயது 42) மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அவர் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், புளோரிடா மாகாண முன்னாள் கவர்னருமான ஜெப் புஷ், லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால், நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி உள்ளிட்டவர்கள் ஓட்டு வேட்டையாடினார்கள்.Indianorigin-politicians-look-strong-in-US-election-race_

வென்றார்

தெற்கு கரோலினா மாகாணத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நிக்கி ஹாலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி ஒபாமாவின் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷிஹீனை விட கூடுதல் ஓட்டுக்கள் வாங்கி, அமோக வெற்றி பெற்றார். நிக்கி ஹாலே 57.8 சதவீத ஓட்டுக்களை பெற்றார். வின்சென்ட் ஷிஹீன் 40 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுக்களை பெற்றார்.

அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற கவர்னர்களில் ஒருவராக திகழும் நிக்கி ஹாலே, தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் கவர்னர் ஆவார். இப்போது தேர்தல் வெற்றி மூலம் அவர் தனது பதவியை தக்க வைத்துள்ளார்.

நிக்கி ஹாலே, தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பாம்பெர்க் என்ற இடத்தில் 1972-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20-ந் தேதி இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கிய தம்பதியரான அஜித் சிங் ரந்தவாவுக்கும், ராஜ் கவுருக்கும் மகளாகப் பிறந்தார். இவரது குடும்பம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசிலிருந்து சென்று, அமெரிக்காவில் குடியேறியவர்கள்.

வெற்றி பெற்ற பிற இந்தியர்கள்

அமெரிக்காவில் நடந்த தேர்தல்களில் இந்திய பூர்வீகக்குடிமக்கள் பலர் வெற்றி பெற்றிருக் கிறார்கள். அது விவரம் வருமாறு:-

* இந்தியப் பெண் கமலா ஹாரிஸ், கலிபோர்னியா மாகாணத்தின் அட்டார்னி ஜெனரல் தேர்தலில் வெற்றி பெற்றார். 50 வயதான இவர் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

* கொலராடோ மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான இந்தியர் ஜானக் ஜோஷி, சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

* ஓயோ மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான மற்றொரு இந்தியர் 23 வயது நீரஜ் ஆன்டனி, சட்டசபை தேர்தலில் மிக இளைய வயதில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

* ஓய்வு பெற்ற டாக்டரான இந்தியர் பிரசாத் சீனிவாசன், கனக்டிகட் மாகாண சட்டசபைக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஜனநாயக கட்சி சார்பில் மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு போட்டியிட்ட சாம்சங் மீண்டும் வெற்றி பெற்று, தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

* மேரிலாண்டில் குமார் பார்வே, அருணா மில்லர் ஆகிய இருவரும் மாகாண சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.

*வாஷிங்டனில் ஜனநாயக கட்சியின் பிரமிளா ஜெயபால் வெற்றி பெற்றுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: