காதலனுடன் மகள் சுகம் அனுபவிப்பதாக தாய் பொலிஸில் முறைப்பாடு; தந்தையே தன்னை துஷ்பிரயோகம் செய்தாரென மகள் வாக்குமூலம்

ullasam14 வய­தான பாட­சாலை மாண­வி­யொ­ருவர் தமது காத­ல­னுடன் வீட்டின் அறை­யொன்றில் காதல் சுகம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­ப­தாக தாய் நொச்­சி­யா­கம பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை விசா­ரணை செய்த போது மாணவி, காதலன் தன்னை துஷ்பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­க­வில்லை என்றும் தந்­தையே  தன்னை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­த­தை­ய­டுத்து தந்தை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

 

நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை சேர்ந்த பெண்­ணொ­ருவர்  பொலிஸ் அவ­சர அழைப்புக்கு தொடர்பு கொண்டு பாட­சாலை மாண­வி­யான தனது 14 வயது மகள் காத­ல­னுடன் வீட்டின் அறை­யொன்றில் இருப்­பதை தாம் பார்த்­த­தாக தெரி­வித்­துள்ளார். இதை­ய­டுத்து பொலிஸார் விரைந்து சென்று வீட்டில் அத்­து­மீறி பிர­வே­சித்­தி­ருந்த இளை­ஞனை கைது செய்­துள்­ளனர்.

 

சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை செய்ய முறைப்­பாட்டு தரப்பை பொலிஸ் நிலை­யத்­துக்கு வரும்­படி பொலிஸார் அழைப்பு விடுத்­தனர். அதன்­படி மாண­வி­யுடன் தாய் மற்றும் தந்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­று­ருந்­தனர்.

 

பொலிஸார் மாண­வி­யிடம் வாக்­கு­மூலம் பெற்­ற­போது அவர் காத­லனின் முன்­னா­லேயே காதலன் தம்மை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­த­வில்லை என்றும் 2013 ஆம் ஆண்டு நான்கு சந்­தர்ப்­பங்­களில் தனது தந்தை தம்மை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

 

 இத­னை­ய­டுத்து தந்­தை­யிடம் வாக்கு­மூலம் பெற்ற  பொலிஸார் அவரை தம்­பத்­தே­கம நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டதையடுத்து பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: