பாலியல் தொந்தரவால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி

kurankuகவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் குத்தாட்டம் ஆட சொல்லியும், தனது செல்வாக்கு மூலம் ரிமோட் பகுதிக்கு தன்னை மாற்றியதாகவும் குற்றம் சாட்டி, ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரியிடம் தனது புகார் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், பெண் நீதிபதி ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தலைமை நீதிபதி லோதா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து முறைப்படி புகார் பெறப்பட்டுள்ளது. இதனால் நான் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேச தலைமை நீதிபதியிடமும் அறிக்கை கேட்டுள்ளேன்.  அவரது அறிக்கை வந்த பிறகு இது குறித்து நடவடிக்கை முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, கடந்த ஜூலை 15 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த கூடுதல் நீதிபதி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
தலைமை நீதிபதி லோதா மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தத்து, தாக்கூர், அனில் தவே, தீபக் மிஸ்ரா மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோருக்கும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அப்பெண் நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், தனது இல்லத்தில் நடைபெற உள்ள விழாவில் ஆபாசமான பாடலுக்கு நடனமாடுமாறு மாவட்ட பதிவாளர் மூலமாக தனக்கு அந்த நீதிபதி தகவல் தெரிவித்தாக அக்கடிதத்தில் அவர் புகார் கூறியுள்ளார்.தன் மீது கடும் கோபம் கொண்ட அவர், தவறே செய்யாதபோதும் தன்னை பலமுறை கண்டித்தாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு 11 மணிக்கு வரவேண்டிய தன்னை 10.30 மணிக்கே வருமாறும், மாலை 6 மணி வரை நீதிமன்ற பணியில் இருக்குமாறும் தனக்கு அந்த நீதிபதி தொல்லைகள் கொடுத்தார். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நான், எனது கணவருடன் அவரை சந்திக்க சென்ற போது என்னையும், எனது கணவரையும் பதினைந்து நாள் கழித்து வருமாறு கூறி அவமானப்படுத்தி பின்னர் தனக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டதாக கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் வேறுவழியில்லாமல் நான் எனது பதவியை ஜூலை 15ந் தேதி ராஜினாமா செய்ய நேர்ந்ததாக தனது கடிதத்தில் அப்பெண் நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
15 ஆண்டுகள் டில்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அப்பெண் வழக்கறிஞர், நீதித்துறை நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு குவாலியரில் நீதிபதி பாலிவாலின் கீழ் பயிற்சி பெற்ற அவர் அதே நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் விசாகா குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டின் அவரது பணி குறித்த அறிக்கையில், சிறப்பாகவும், நன்றாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: