பெங்களூருவில் கொடூரம் : மேலும் ஒரு பள்ளி மாணவி பலாத்காரம்

Tamil_News_363532662392பெங்களூவில் 6 வயது பள்ளி மாணவி பலாத்கார விவகாரம் அடங்குவதற்குள், அங்கு மீண்டும் 7 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காமாக்ஷி பாளையாவை சேர்ந்த 7 வயது மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயும், தந்தையும் தனியார் நிறு வனங்களில் பணியாற்றி வரு கின்றனர். இவர்கள் தங்கள் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விடுவதற்கும் அச்சிறுமி படிக்கும் பள்ளியில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் லட்சுமி என்பவரை நியமித்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் லட்சுமி அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். தனக்கு வேறு வேலைகள் இருந்ததால் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நேரத்தில் கட்டிடத் தொழிலாளியான லட்சுமியின் மகன் சீனிவாசன் (26), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப் பட்ட சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் விவரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காமாக்‌ஷிபாளையா காவல்நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்றே சீனிவாசனை கைது செய்தனர். சீனிவாசன் மீது இந்திய தண்டனை சட்டம் 314-ம் பிரிவின் கீழும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூரு விப்ஜியார் தனியார் பள்ளியில் கடந்த 2-ம் தேதி 6 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் ராகவேந்திரா அவ்ராத்கர் இடமாற்றம் செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: