‘மதம் மாறுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள்”: மொசூல்

Christians-to-convert-or-face-deathஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர்.

ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்ஐஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்த பகுதியில் முஸ்லிம் அல்லாத மக்கள் வாழ மூன்று வாய்ப்புகளை கொடுத்துள்ளது. ஒன்று தங்கள் மதத்திற்கு மாறி கூடுதல் வரி கட்டுவது, அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது, அல்லது கொல்லப்படுவது என்று கொடுக்கப்பட்ட வாய்ப்புகளால் அச்சத்திற்குள்ளான கிறிஸ்தவர்கள், அருகிலுள்ள குர்திஸ்தான் மாகாணத்தின் கோஹீக், அர்பில் போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அதோடு, மொசூலில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க 1800 ஆண்டுகள் பழைமையான, கிறிஸ்தவ தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். இதனால் கடந்த 2000 ஆண்டுகள் வரலாற்றில், மொசூல் நகரம் முதன் முறையாக ஒரு கிறிஸ்தவர் கூட இல்லாத முழு முஸ்லிம் நகரமாக மாறியுள்ளது.

மேலும் இந்த ஐஸ்ஐஸ் அமைப்பினர், வெளியேறும் கிறிஸ்தவர்களிடம் உள்ள கைடக்கத் தொலைபேசிகள் மற்றும் விலை மதிக்கத்தக்க பொருட்களை வாங்கிக்கொண்டு கொண்டு வெரும் துனிகளுடன் விடுவித்துள்ளனர்.Christians-to-convert-or-face-death

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: