கள்ளக்காதலை தட்டி கேட்ட காதலியின் தாய் குத்தி கொலை

Tamil_Newssவீடு புகுந்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகளின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இவர், உல்லாசத்தை நேரில் பார்த்து கண்டித்ததால் குத்திக் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.Tamil_Newss

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மரகதம் (65). இவரது மகள் ஆனந்தி. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 13ம் தேதி இரவு 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 14ம் தேதி அதிகாலையில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர், மரகதத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார்.

இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க, சிப்காட் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.(ஓசூரில் வீடு புகுந்து மூதாட்டி படுகொலை )

இதில், ஓசூர் பேடரப்பள்ளி பாரதிநகரை சேர்ந்த சேகர் என்கிற ஆடுசேகர் (28) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டதும், அவர் கொலையான மரகதத்தின் மகள் ஆனந்தியின் கள்ளக்காதலன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ஆட்டுக்கறி கடை வைத்துள்ளேன். கொலையான மரகதத்தின் மகள் ஆனந்தியுடன் நான் தொடர்பு வைத்திருந்தேன். அடிக்கடி அவளுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த 13ம் தேதி அவரது வீட்டிற்கு நான் சென்றபோது, அவரது தாய் மரகதம் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நான் வீட்டிற்குள் நுழைந்து ஆனந்தியுடன் உல்லாசமாக இருந்தேன்.

சத்தம் கேட்டு எழுந்து பார்த்த மரகதம் என்னை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திக் கொலை செய்தேன். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என ஆனந்தியை மிரட்டி சென்றேன் எனக் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகரை போலீசார் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: