கர்ப்பிணிப் பெண் செய்தியாளரை கற்பழிக்க உத்தரவிட்ட எம்.பி யால் பரபரப்பு (Photos,Video)

iyamanரஷியாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.யிடம் பெண் செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அந்த எம்.பி. தனது ஆட்களை விட்டு 6 மாதம் கற்பமாக இருந்த பெண் செய்தியாளரை கற்பழிக்க உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான விளாடிமிர் ஜிரோனோஸ்கி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ரஷியாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் பகுதியான கிழக்கு உக்ரைனுக்கு தடை விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதனால் கோபம் அடைந்த எம்.பி. விளாடிமிர் ஜிரோனோஸ்கி தனது ஆதரவாளார்களை ஓடி சென்று பெண் செய்தியாளரை கற்பழிக்க கூறியுள்ளார். மேலும், தனது உதவியாளர்களை பெண் செய்தியாளர் ஸ்டெல்லாவை நோக்கி தள்ளியுள்ளார்.

ஸ்டெல்லா ஒரு குழந்தைக்கு தாய் ஆவார். அவர் தற்போது 6 மாதம் கற்பமாக உள்ளார். இந்நிலையில் அவரை நோக்கி சென்ற ஜிரோனோஸ்கியின் ஆட்கள் பலமாக பிடித்துக்கொண்டார். இதனை பார்த்தும் மற்ற செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரஷியா டுடே செய்தித்தாளின் செய்தியாளரான ஸ்டெல்லா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், ஜிரோனோஸ்கியின் ஆட்கள் கடுமையாக நடந்து கொண்டதால் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற்து. இவ்விவகாரம் தொடர்பாக எம்.பி.க்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

எம்.பி.யின் ஆட்கள் ஸ்டெல்லாவிடம் தவறாக நடக்க முயன்றபோது அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், ஸ்டெல்லா தற்போது கற்பிணியாக உள்ளார். அவரை ஏன் இவ்வாறு தாக்குகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது மிகவும் தரக்குறைவானது. அவமானகரமானது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? செய்தியாளர்கள் ஜிரோனோஸ்கியை நோக்கி கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து ஜிரோனோஸ்கி நீங்கள் என்ன இங்கு தலையீடு செய்கிறீர்கள், நீங்கள் லெஸ்பியன்? நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார். மேலும், கற்பிணி பெண்களுக்கு செய்தியாளர் சந்திப்பில் இடம் கிடையாது என்று கூறியுள்ளார்.iyaman kodumairusland

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s