எஜமானரை கொன்று மனைவியை கற்பழித்த மெக்சிகோ ஆசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Mexicanஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் ராமிரோ ஹெர்னாண்டஸ் (வயது 44). மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டவர்.இவர் கடந்த 1997–ம் ஆண்டு, தென்மத்தி டெக்சாஸில் தனது எஜமானர் கிளன் லிச் என்பவரை இரும்பு தடியால் தாக்கி கொன்றார். அவரது வீட்டை சூறையாடினார். அவரது மனைவியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீலில் அது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஹண்ட்ஸ்வில்லி என்ற இடத்தில் உள்ள சிறையில், நேற்று அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் உயிர் பிரிந்தது. இதன்மூலம் ராமிரோ ஹெர்னாண்டஸ், இந்த ஆண்டு டெக்சாஸில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 6–வது நபர் என்ற பெயரைப் பெற்றார். அமெரிக்காவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 16–வது நபர் என்ற பெயரும் கிடைத்தது.Mexican

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக ஹெர்னாண்டசுக்கு தனது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: