பணக்காரராகலாம் என்ற நம்பிக்கையில் அந்தரங்க உறுப்பை காட்டு விலங்கு கடித்து தின்ன அனுமதித்த இளைஞர்

Zuluஅந்தரங்க உறுப்பை ஹையெனா எனும் வன விலங்கை கடிக்க அனுமதித்தால் பணக்காரராகி விடலாம் என மந்திரவாதியொருவர் கூறியதை நம்பிய இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பையும் 3 விரல்களையும் பறிகொடுத்த சம்பவம் ஸாம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

சமன்கெனி ஸுலு எனும் இந்த இளைஞர் மாலாவி நாட்டிலிருந்து ஸாம்பியாவுக்கு 4 மாதங்களுக்குமுன் இடம்பெயர்ந்தவர். தற்போது ஸாம்பியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவர், இந்த அனர்த்தம் தொடர்பாக கூறுகையில்,
‘நான் மாலாவியிலிருந்து வந்தவன்.  உடல் அங்கங்கள் சிலவற்றை தியாகம் செய்வதன் மூலம் செல்வந்தராகிவிடலாம் என நான் சந்தித்த வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.
இதற்காக காட்டில் நிர்வாணமாக நிற்குமாறு நான் அறிவுறுத்தப்பட்டேன்.
இதன்படி, கடந்த 24 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் ஸாம்பியாவிலுள்ள பற்றைக்காட்டில் நான் நிர்வாணமாக நின்றேன். ஹையெனா மிருகம் வந்தது. ஆது எனது கால் விரல்களை தின்றதுடன்  இறுதியில் எனது ஆணுறுப்பையும் தின்றுவிட்டது’ எனக் கூறியுள்ளார்.Zulu
இந்நடவடிக்கையின்போது தனது அங்கங்களை முற்றாக இழக்க நேரிடும் என தான் எச்சரிக்கப்படவில்லை எனவும் ஸூலு கூறியுள்ளார்.
மேற்படி சம்பத்தின்பின் இரத்தம் தோய்ந்த உடலுடன் தவிழ்ந்த நிலையில் அருகிலுள்ள வீதியொன்றுக்கு ஸூலு சென்றார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எவ்வாறெனினும் தனது அங்கங்களை இழந்ததால் தான் செல்வந்தராகி விட முடியும் என இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸூலு. இச்சம்பவம் குறித்து ஸாம்பிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: