ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திய விஜயகாந்த்!

’’ஆளே இல்லாத கடையில அப்படி யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்குற… ஒன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா’’ என்று நடிகர் விவேக்கின் பிரபலமான திரைப்பட காமெடி இருக்கிறது.  அதுபோலத்தான் இன்று நாமக்கல் தொகுதியிலும் நடந்தது.

வேட்பாளரே அறிவிக்கப்படாத நாமக்கல் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.  ’’நாங்கள்  யாருக்கு ஓட்டு போடவேண்டும்?’’ என்று கட்சியினர் கேட்கும் அளவிற்கு அமைந்தது விஜயகாந்தின் நாமக்கல் பிரச்சாரம்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க.  வேட்பாளராக மகேஷ்வரன் அறிவிக்கப்பட்டார். மகேஷ் வரனுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு ஏற்கனவே ஆபரேசன் செய்துள்ளார்.

vijayakanthதற்போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாமக்கல் பாரளுமன்ற தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவிக்க கோரி அவர் கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இன்று மாலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாமக்கல் அண்ணா சிலை அருகில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக மகேஸ்வரன் அறிவித்ததால் விஜயகாந்த் அதிர்ச்சி அடையவில்லை.

நாமக்கல் புதிய வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில், வேட்பாளர் விலகியதால் பிரச்சாரத்தை தள்ளிப்போடாமல், திட்டமிட்டப்படி பிரச் சாரத்தை முடித்தார்.

’’நான் 40 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.  அத்தனை தொகுதியிலும் நான் வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள்.  அதை பூர்த்தி செய்யவேண்டும்.  அதனால் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை செய்கிறேன்.

வேட்பாளரே இல்லாததால் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.  (நாங்கள்  யாருக்கு ஓட்டு போடவேண்டும்?’’ என்று கட்சியினர் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்)  யார் வேட்பாளர் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும்.  நீங்கள் எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள்’’ என்று பிரச்சாரம் செய்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: