கொலை வழக்கில் வாலிபருக்கு 249 ஆண்டு சிறை

Kolanyanகடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வாட் புரோம்குனராம் என்ற பௌத்தக் கோவிலில் திருட நுழைந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த ஆறு புத்த பிட்சுகள் உட்பட ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தக்கொலையில் ஈடுபட்ட ஜோனாதன் ஏ டூடி என்பவனுக்கு அப்போது 17 வயதுதான் நிரம்பியிருந்தது. வெறும் 2,600 டாலர் பணத்தையும், புத்த பிட்சுக்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும் இவர்கள் திருடியுள்ளனர்.

திருடியதை சொல்வதற்கு சாட்சியங்கள் இருக்கக்கூடாது என்ற திட்டத்தில் டூடி தனது நண்பன் சொன்னதையும் கேட்காமல் அங்கிருந்த அனைவரையும் கொன்றுள்ளான். அவனது தாயும், சகோதரனும்கூட இந்த மடாலயத்தில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியதாகக் கூறப்படுகின்றது.

இவனுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவனது நண்பன் அலிசான்ரோ அலெக்ஸ் கார்சியா இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணையில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதால் ஆயுள் தண்டனை பெற்றுள்ளான். இருவரும் இணைந்து திருடியபோதும் கொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டி செயல்படுத்திய டூடிக்கு 249 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் குற்றம் நடைபெறும்போது 18 வயது நிரம்பாத பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்படக்கூடாது என்ற நடைமுறையைக் கொண்டுவந்ததால் அவனுக்கு இந்த நீண்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனை அவனுக்கு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பார்ப் ஹெல்லர் என்ற அரசு வழக்குரைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: