குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு: காதலன் சிறையில் அடைப்பு

kaithuசென்னை புரசைவாக்கம், ஆர்.கே.புரம், பிரீக்ளின் ரோட்டைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது-வயது 19). நர்சு பயிற்சி பெற்று வந்தார்.

தண்டையார்பேட்டை அரசு தொற்று நோய் ஆஸ்பத்திரியில், தினமும் பயிற்சிக்கு செல்வார். அப்போது ஆஸ்பத்திரி எதிரில் இளநீர் கடை நடத்தி வந்த, சதீஷ்(வயது 24) என்பவருடன், காதல் ஏற்பட்டது. இளநீர் சாப்பிடச் சென்ற போது, ஏற்பட்ட காதல், பின்னர் செல்போன் பேச்சு மூலம் வளர்ந்தது. காதல் முற்றி இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர்.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சதீஷ், ஜானகி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கி, ஜானகியுடன், சதீஷ் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. ஜானகி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, சதீஷ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சதீஷ் மீது, சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் ரவிசங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜமுனாராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்லாலி ஆகியோர் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த, சதீஷ், கோர்ட்டில் சரண் அடைந்து விட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஜானகிக்கு, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: