மன்மோகனுக்கு ஸ்பெஷல் விருந்து 3.4 கோடி செலவழித்து அமெரிக்கா தாராளம்

Evening-Tamil-News-Paperஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அரசு சார்பில் உலக தலைவர்களுக்கு விருந்து அளிக்க செலவிட்ட தொகை சுமார் 9 கோடிக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் அதிகப்பட்சமாக ரூ.3.4 கோடி செலவிடப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது, அவர்களுக்கு விருந்தளிக்க செலவிட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியிட வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள டரேல் ரிசா என்பவர் பொது நலன் கருதி கடந்த 2012 நவம்பர் மாதம் முதல் தேதி அதிபர் ஒபாமா மற்றும் அப்போதைய வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் அமெரிக்காவின் பிரீடம் ஆப் இன்பர்மேஷன் ரிக்வஸ்ட் என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 13 மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இப்போது அமெரிக்க அரசு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு தெரிவித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

அரசு சார்பில் உலக தலைவர்களுக்கு விருந்து அளிக்க செலவழிக்கப்பட்ட தொகை ரூ.9.3 கோடி. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 2009ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி அன்று கலந்து கொண்ட விருந்துக்கு மட்டும் ரூ.3.4 கோடி செலவிடப்பட்டது. 2010ம் ஆண்டு மே 19ம் தேதி மெக்சிகோ அதிபர் பெலிபி கால்டெரான் கலந்து கொண்ட விருந்துக்கு ரூ.3.3 கோடி, 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அளித்த விருந்துக்கு ரூ.2.4 கோடி செலவிடப்பட்டது.

மேலும் 4வது முறையாக 2011 ஜூன் 7ம் தேதி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெலுக்கு ரூ.1.3 கோடியும், அதே ஆண்டு அக்டோபர் 13ம் தேதி தென் கொரிய அதிபர் லீ மையூங்பக் கலந்து கொண்ட விருந்துக்காக 1.2 கோடியும் செலவானது. இவ்வாறு அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது. Evening-Tamil-News-Paper

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: