சிறுமி பாலியல் பலாத்காரம் -வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

sirumi7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு புதிய சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

திருச்சி காஜாப்பேட்டை பசுமடம் ஆதிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் உலகநாதன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 25-5-2013 அன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி அழைத்துச்சென்றார். பின்னர் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு வீட்டில் அடைத்து வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி அழுதார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, உலகநாதனை கைது செய்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படி திருச்சி மாநகரில் முதல் வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி கோர்ட்டில், நடந்த சம்பவம் பற்றி விரிவாக சாட்சியம் அளித்தார். மேலும் மருத்துவ சான்றிதழ்களும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தன. இதனை தொடர்ந்து உலக நாதன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

10 ஆண்டு கடுங்காவல்

மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ஏ.கே.ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட உலகநாதனுக்கு இந்திய தண்டனை சட்டம் 342-ன் படி (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்) ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.500 அபராதமும், 506 (2) ன்கீழ் (கொலை செய்வதாக மிரட்டுதல்) 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.500 அபராதமும், குழந்தைகளை வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 6-ன்படி 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, 1000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.

ரூ.1 லட்சம் இழப்பீடு

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலன் கருதி அவருக்கு அரசாங்கம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும், அந்த சிறுமி மேஜர் வயதை எட்டும் வரை அதில் இருந்து கிடைக்கும் வட்டியை அவருக்கு வழங்கவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அம்மு ஆஜர் ஆகி வாதாடினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: