34வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சந்தானம்!

santhaanamசின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடர்ந்த சந்தானம், தமிழ் சினிமாவில் கால்பதித்து, இப்போது நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபடத்தில் சந்தானம் இருந்தார் என்றால் அந்தப்படத்திற்கான போட்ட காசை எடுத்துவிடலாம் என்பது அநேக தயாரிப்பாளர்களின் எண்ணம். அதனால் தான் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லாம். முன்னணி நடிகர்கள் படம் என்றாலும் அதில் சந்தானத்தின் காமெடியும் சேர்ந்துவிட்டால் அப்படம் நிச்சயம் வெற்றி. அந்தளவுக்கு அவரது காமெடி கொடி இறக்கை கட்டி பறக்கிறது.

நிற்க கூட நேரமின்றி, தூக்கத்தை கூட மறந்து, ராத்திரி பகல் என்று பாராமல் ஓய்வென்றி நடித்து வரும் சந்தானத்திற்கு இன்று 34வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை ஆடம்பரமாய் எல்லாம் கொண்டாடவில்லை. மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். தனது பெற்றோரிடம் ஆசி பெற்று, பின்னர் சென்னையை அடுத்துள்ள தனது குலதெய்வம் கோயிலான கள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து, பின்னர் ஒவ்வொரு ஆண்டு திருவண்ணாமலை சென்று வழிபடுவதை போல் இந்தாண்டும் திருவண்ணாமலை கிளம்பி சென்று விட்டார். சந்தானத்தின் 34வது பிறந்தநாளையொட்டி அவரது அபிமானிகள் ஏராளமானபேர் சென்னை முழுக்க வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: