போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர நிலையமாக இலங்கை

Sri_Lankaபோதைப்­பொருள் வியா­பா­ரத்தின் கேந்­தி­ர­ நிலையமாக இலங்கை மாறி விட்­டது. இதன் பின்­ன­ணியில் அர­சாங்க தரப்­பி­னரே உள்­ளனர் என பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

பௌத்த நாட்டில் போதைப்­பொருள் வியா­பா­ரத்தை மேற்­கொள்­வது யாராக இருப்­பினும் அவர்­களை தண்­டிக்க வேண்டும் மற்றும் காலம் கடந்தால் குற்­றத்தை கண்­டு­பி­டிக்க முடி­யா­தெ­னவும் அவ் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்,

“ஆசி­யாவின் போதைப்­பொருள் வியா­பா­ரத்தின் முக்­கிய இட­மாக இலங்கை மாறி விட்­டது. தினமும் அதிக தொகை­யி­லான போதைப்­பொருள் கைப்­பற்­றப்­ப­டு­கின்­றது. குறைந்த அள­வி­லான மக்கள் தொகை­யினைக் கொண்­டுள்ள எமது நாட்டில் டொன் நிறை­களில் போதைப்­பொருள் பரி­மா­றப்­ப­டு­கின்­ற­மை­யா­னது எமது மக்­க­ளி­டையே பெரிய பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும்.

அர­சாங்கம் கடு­மை­யான சட்ட திட்­டங்­க­ளையும் பாது­காப்­புக்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­தியும் இவ்­வாறு போதைப்­பொ­ருட்கள் கடத்­தப்­ப­டு­கின்­ற­தென்றால் இதன் பின்­ன­ணியில் அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் இருந்­தாக வேண்டும். இல்­லை­யென்றால் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இலங்­கையில் ஏற்­பட வாய்ப்­பில்லை. நிச்­ச­ய­மாக 4அல்­லது 5 அமைச்­சர்கள் இதில் தொடர்­பு­பட்­டுள்­ளனர். ஜனா­தி­பதி இதற்­கான சரி­யான விதத்தில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யாயின் வெகு விரைவில் இலங்­கையும் முஸ்லிம் நாடுகளைப் போல் மாற்றம் பெறலாம். பெளத்த நாடென்ற பயத்­தி­னையும் மதிப்­பி­னையும் அர­சாங்கம் ஏற்­ப­டுத்த வேண்டும்.

எமது நாட்­டிலும் குற்­றத்­திற்­கான தண்­ட­னை­களை அதி­க­ரிக்க வேண்டும். சூதாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு இலங்­கையில் இடம்­கொ­டுப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே இன்று இலங்கை மோச­மான நாடு­களின் பட்­டி­யலில் இணைந்­துள்­ளது.

எதிர்க்­கட்­சிகள் அர­சாங்­கத்தை குறை சொல்­வதை விடுத்து சர்­வ­தேச தலை­யீ­டு­க­ளுக்கும் ஏனைய செயற்பாடு­க­ளுக்கும் எதிர்ப்பு தெரி­விக்க வேண்டும்.

இல்­லையேல் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருந்தால் குற்­ற­வா­ளிகள் தப்­பிக்­கொண்டே இருப்­பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: