திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் ஆசிட் வீசி கொலை

kavurபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 7-ம் தேதி அழகு நிலையத்தில் இருந்த மணப்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டது. 22 வயதான ஹர்பிரித் கவுர் என்ற அந்த பெண் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் லூதியானாவில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.

பலத்த காயமடைந்த அவரை மும்பையிலுள்ள தேசிய தீப்புண் மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவரது கண், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகள் மிக மோசமாக சிதைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து 3 அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவர்களின் 3வது அறுவை சிகிச்சை முடிந்ததும் அவரது உடல்நிலை திடீரென மோசமான நிலைக்கு சென்று உயிரிழந்தார்.kavur

கடினமாக முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற இயலவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சுனில் மனோகர் கெஸ்வாணி, அப்பெண் உயிரிழந்தது குறித்து கூறும்போது, அழுகிய புண் காரணமாக அவரது ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவும், அவரது உடல் உறுப்புகள் சரியாக இயங்காததாலும் இறக்க நேரிட்டது என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: