சச்சினின் சாதனையை முறியடித்த மும்பை மாணவன்

kiriமும்பையில் உள்ள ஆசாத் என்ற பள்ளி மைதானத்தில் 1988 ஆம் ஆண்டு சச்சினும் அவரது பள்ளித்தோழர் காம்ப்ளியும், சேர்ந்து 664 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தனர். சச்சின் 326 ரன்களும், காம்ப்ளி 349 ரன்களும் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து அதே மைதானத்தில் மும்பை பள்ளிச்சிறுவன் ஒருவர் தனியொருவராக 546 ரன்கள் குவித்து சச்சினின் சாதனையை உடைத்துள்ளார்.

அந்த பள்ளி மாணவரின் பெயர் பிரிதிவ் ஷா. 15 வயதே ஆன இவர், ஹாரிஸ் ஷில்ட் கிரிக்கெட் தொடரில் செயிண்ட் பிரான்ஸிஸ் அணிக்கு எதிராக விளையாடி 330 பந்துகளை சந்தித்து 85 பவுண்ட்ரிகளும், 5 சிக்சர்களும் அடித்து மொத்தம் 546 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பள்ளி கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை புரிந்த தாதாபாய் ஹேவ்வாலாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

1933ஆம் ஆண்டு ஹேவ்வாலா என்ற மாணவர் 515 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதுமட்டுமின்றி பள்ளி கிரிக்கெட்டில் உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்து மற்றொரு சாதனையையும் புரிந்துள்ளார் பிரிதிவ் ஷா. 628 ரன்கள் குவித்து காலின்ஸ் என்பவர் முதலிடத்திலும், 566 ரன்கள் குவித்து ஸ்டிரக் என்பவர் என்பவர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: