• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

போதையில் இருந்ததை மறைப்பதற்கு போலி ஆணுறுப்பை பயன்படுத்திய வீரர்

mike-tysonமுக்கிய குத்­துச்­சண்டைப் போட்­டி­க­ளின்­போது  போதைப் பொருட்­களை பயன்­ப­டுத்­திய நிலையில் காணப்­பட்­ட­தாக உலகின் முன்னாள் அதி­பார குத்­துச்­சண்டை சம்­பி­ய­னான மைக் டைசன் முதல் தட­வை­யாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அத்­துடன் தான் போதைப் பொருட்­களை பயன்­ப­டுத்­தி­யமை கண்­டு­பி­டிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்­காக சிறுநீர் பரி­சோ­த­னை­களின் போது வேறு நபர்­களின் சிறுநீர் நிரப்­பப்­பட்ட போலி ஆணு­றுப்பை தான் பயன்­ப­டுத்­திய அதிர்ச்சித் தக­வ­லையும் மைக் டைசன் வெளி­யிட்­டுள்ளார்.

47 வய­தான மைக் டைசன், புதிய நூலொன்­றி­லேயே முதல் தட­வை­யாக இத்­த­க­வல்­களை வெளி­யிட்­டுள்ளார். Undisputed Truth   எனும் இந்நூல் அடுத்­த­வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. எனினும் இந்­நூலின் சில பகு­திகள் ஏற்­கெ­னவே வெளி­யா­கி­யுள்­ளன.

1986 ஆம் ஆண்டு  தனது 22 ஆவது வயதில் உலக குத்­துச்­சண்டைக் கவுன்­ஸிலின் சம்­பியன் பட்­டத்தை வென்­றதன் மூலம், மிக இளம்­வ­யதில் உலக அதி­பார சம்­பியன் பட்­டத்தை வென்­றவர் எனும் சாத­னையை படைத்­தவர் மைக் டைசன். உலக குத்­துச்­சண்டை சங்கம், சர்­வ­தேச குத்­துச்­சண்டை சம்­மே­ளனம் ஆகி­ய­வற்றின் அதி­பார சம்­பியன் பட்­டங்­களை வென்ற மிக இளம் வீரரும் மைக் டைசன்தான்.Mike tyson_ear

எனினும் குத்­துச்­சண்டைக் களத்­திலும் அதற்கு வெளி­யிலும் அடிக்­கடி சர்ச்­சை­களில் சிக்­கு­ப­வ­ராக அவர் காணப்­பட்டார்.

அமெ­ரிக்க கறுப்­பின அழ­கு­ரா­ணி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கி­யதால் 3 வரு­டங்­களை டைசன் சிறையில் கழித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1997 ஆம் ஆண்டு நடை­பெற்ற குத்­து­ச் சண்டை போட்­டி­யின்­போது தன்­னுடன் மோதிய இவாண்டர் ஹொலி­பீல்ட்டின் காதை  கடித்து துண்­டாக்­கி­யமை குத்­துச்­சண்டை உலகில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனால், போட்­டி­க­ளின்­போது அவர் போதைப் பொருட்­களை பயன்­ப­டுத்­தியதை மறைப்­ப­தற்கு மோச­டி­களில் ஈடு­பட்­டதை தனது புதிய நூல் மூலம் முதல்­த­ட­வை­யாக ஒப்­புக்­கொண்­டுள்ளார் டைசன்.

மது மற்றும் கஞ்சா முத­லான போதைப் பொருட்­களை தான் அடிக்­கடி பயன்­ப­டுத்­தி­ய­தா­க­ அவர் தெரி­வித்­துள்ளார். 2000 ஆம் ஆண்டு டெட்ரோய்ட் நகரில் நடை­பெற்ற அன்ட்ரூ கலோட்­டா­வு­ட­னான போட்­டி­யின்­போது, மைக் டைசன்  கஞ்சா பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தமை சிறுநீர் பரி­சோ­த­னையின் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதனால் மைக் டைச­னுக்கு 2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் அப­ரா­த­மாக விதிக்­கப்­பட்­டது.

அதன்பின் இத்­த­கைய சோத­னை­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக அதி­ர­டி­யான உபா­யத்தை கடை­பி­டித்த­தாக மைக் டைசன் கூறி­யுள்ளார்.

மற்­றொரு நபரின் சிறுநீர் நிரப்­பப்­பட்ட ஆணு­றுப்பு போன்ற குழா­யொன்றை போட்டி நடத்தும் ஒவ்­வொரு இடத்­துக்கும் தனது குழு­வினர் கொண்டு சென்­ற­தாக டைசன் தெரி­வித்­துள்ளார். சிறுநீர் பரி­சோ­த­னைக்கு சிறுநீர் வழங்­கு­மாறு கோரப்­பட்டால் தனது சிறு­நீ­ருக்குப் பதி­லாக மேற்­படி குழா­யி­லுள்ள சிறு­நீரை அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பிப்­பதை அவர் வழக்­க­மாக கொண்­டி­ருந்­தாராம்.

2002 ஆம் ஆண்டு லெனொக்ஸ் லூயி­ஸு­ட­னான போட்டி தொடர்­பான செய்­தி­யாளர் மாநாட்­டின்­போது தான் கொக்­கேயின் போதை தலைக்­கே­றிய நிலையில் காணப்­பட்­ட­தா­கவும் மைக் டைசன் ஒப்­புக்­கொண்­டுள்ளார். அச்­செய்­தி­யாளர் மாநாட்டில் இரு­வரும் அரு­க­ருகே நின்று போஸ்­கொ­டுத்­த­போது “நான் எனது மனக்­கட்­டுப்­பாட்டை இழந்­தி­ருந்தேன்.mike-tyson

லூயிஸை நான் பார்த்­த­போது அவரை தாக்க வேண்­டும்போல் தோன்­றி­யது” எனவும் மைக் டைசன் அச்­சம்­ப­வத்தை நினை­வு­கூ­ரு­கையில் தெரி­வித்­துள்ளார்.

நகைகள் வாங்­கி­ய­மைக்­கான 8 இலட்சம் டொலர் கட்­ட­ணத்தை செலுத்­தா­மைக்­காக குத்­துச்­சண்டை போட்டி ஊக்­கு­விப்­பா­ள­ரான, பிராங் வொரனை லண்டன் ஹோட்­ட­லொன்றில் வைத்து தான் தாக்­கி­ய­தையும் டைசன் நினை­வு­கூர்ந்­துள்ளார்.

ஓரு தடவை ஒரு இலட்சம் டொலர் பெறு­ம­தி­யான நாணய நோட்­டு­களைக் கொண்ட சூட்கேஸ் ஒன்றை  தான் போதையில் தொலைத்­து­விட்­ட­தா­கவும் ஒரு வாரத்தின் பின்னர் தனது உத­வி­யாளர் ஒரு­வரால் அது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டைசன் கூறியுள்ளார்.

போதையால் தனது குத்துச்சண்டை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை எதிர்கொண்ட மைக் டைசன், பின்னர் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்காக பல வருடங்கள் புனர்வாழ்வுப் பயிற்சிகளுக்குள்ளானார். அதன்பின் “ஹேங் ஓவர்” எனும் திரைப்படத்தில் தோன்றியதுடன் ஓரங்க நாடகமொன்றிலும் நடித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: