மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவன்

neruppuதிண்டுக்கல் அருகில் உள்ள கொடைரோடு மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாண்டியம்மாள் (21) என்பவருக்கும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஒரு மகன் உள்ளான். பாலமுருகன் தனது பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

திருமணத்தின்போது பாண்டியம்மாள் குடும்பத்தினர் நகை, பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுத்திருந்தபோதிலும் மேலும் வரதட்சணை கேட்டு பாலமுருகன் குடும்பத்தினர் கொடுமை படுத்தி வந்தனர். வரதட்சணை வாங்கி வராவிட்டால் பாலமுருகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க போவதாகவும் கூறி வந்தனர்.

நேற்று இரவு இதே பிரச்சினை தொடர்பாக பாண்டியம்மாளுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. பாண்டியம்மாள் தனது தந்தை வீட்டில் பணம், நகை எதுவும் வாங்கி வர முடியாது என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அவரது தந்தை ராமச்சந்திரன் (55), தாய் தனலட்சுமி (42), சகோதரி மீனா (18) ஆகியோர் ஒன்று சேர்ந்து பாண்டியம்மாள் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி.கருப்புச்சாமி, அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்–இன்ஸ் பெக்டர் பாண்டியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை. இதனால் பாலமுருகன் மற்றும் அவரது பெற்றோர்களை தேடி வருகின்றனர்.

திருமணமாகி 2½ வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. வரதட்ச ணைக்காக இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: