பள்ளி மாணவி பலாத்காரம்: தனியார் டிவி புகைப்பட கலைஞர் கைது

kaithuசென்னை சேத்துப்பட்டில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தனியார் டி.வி. புகைப்பட கலைஞர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சேத்துப்பட்டு பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் கௌதமன் (28). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் உதவி புகைப்பட கலைஞராக வேலை செய்து வருகிறார். கௌதமனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கௌதமன், சேத்துப்பட்டு எம்.எஸ். நகரில் வசிக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் தனது அக்காள் மகளிடம் தவறான நோக்கத்தில் பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கௌதமன்து அக்காள் மகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தாராம். இவ்வாறு கௌதமன் பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கௌதமன் மிரட்டியதால், அந்த மாணவி இதை யாரிடம் கூறாமல் இருந்து வந்தாராம்.

மேலும் இந்த தவறான பழகத்தினால் அந்த மாணவி கர்ப்பமடைந்தாராம். இதற்கிடையே பள்ளி மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது, அவரின் தாயாரும், கௌதமனின் அக்காளுமான மலருக்கு தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கௌதமனை கைது செய்தனர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: