நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் வெற்றி

korikedநியூஸிலாந்து அணியுடனான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் பங்களாதேஷ் அணி பெற்றுள்ளது.

மீர்பூர் நகரில் இன்று நடைபெற்ற 2 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49 ஓவர்களில் 249 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் கொரி அண்டர்சன் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேம்ஸ் நீஷாம் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் சொஹாக் காஸி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஷ்ரபி மோர்ட்டஸா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் பங்களாதேஷ் அணி தற்போது 2:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. 3 ஆவது போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

cek

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: