பள்ளிக்கூட வளாகத்தில் 6-ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு

maanaviஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தீக்குளித்தாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளாள். இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்புத்தெருவில் வசிப்பவர் கன்னியப்பன். இவருடைய மகள் சினேகா(வயது 11). இவள், பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.maanavi

ஆயுதபூஜை-விஜயதசமி விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மாணவி சினேகா, வழக்கம்போல நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் புறப்பட்டு சென்றாள். பின்னர் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனித்தாள். மாணவி சினேகா, தான் கொண்டு வந்த பாட புத்தக பையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியை மறைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது.

காலையில் பள்ளி இடைவேளையின் போது சினேகா, அந்த மண்எண்ணெய் பாட்டில் மற்றும் தீப்பெட்டியை சக மாணவிகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்து கொண்டு கழிவறைக்கு ஓடினாள். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிய சினேகா, உடலில் தீ வைத்துக்கொண்டாள்.

தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. உடலில் எரிந்த தீயுடன், “அய்யோ… அம்மா… காப்பாற்றுங்கள்…” என வலியால் அலறி துடித்தபடியே கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்தாள்.

இதனைக்கண்ட சகமாணவிகள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினார்கள். இதுபற்றி அவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் உயிருக்கு போராடிய சினேகாவை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மாணவி சினேகாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு வி.பாலசந்திரன், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சிவக்குமார் மற்றும் போலீசார் மாணவி தீக்குளித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் மாணவி தீக்குளித்த கழிவறைக்கு சென்று அங்கிருந்த மண்எண்ணெய் பாட்டில் மற்றும் தீப்பெட்டியை கைப்பற்றினர். மாணவி சினேகா, எதற்காக தீக்குளித்தாள். என்று தெரியவில்லை. அவளது புத்தக பையில் ஏதாவது கடிதம் எழுதி வைத்து இருக்கிறாளா? எனவும் ஆய்வு செய்தனர்.

ஆனால் அதுபோல் கடிதம் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகா எதற்காக தீக்குளித்தாள்? குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிக்கூட வளாகத்திலேயே மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக மாணவிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாணவி தீக்குளித்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கூடத்துக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: