ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, என்னுடன் சேர்த்து வையுங்கள்

rajinimakalசூப்பஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் பொருத்தமானவர் இல்லை, எனவே அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என ஒருவர் பொலிஸில் புகார் கொடுக்க முற்பட்டதாக தெரியவந்துள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் 2004 நவம்பர் மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷ்சை கரம்பிடித்தார். இருவரும் திருமணமான ஆரம்பகாலத்தில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தினார். ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்கையில் புயல் வீச தொடங்கியுள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைப்படமே.தனுஷ் – ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து, இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. 3 படம் வெளியாகிய பின்னும் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாமல் இரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கிட்ட தட்ட ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவை போலவே கல்யாணம் செய்யாமலே தனுஷ்டன் குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலால் மனவேதனையின் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளார்.rajinimakal சில தினங்களுக்கு முன் ஒரு நபர் (பெயர் வெளியிடப்படவில்லை) சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளார். அது பின்வருமாறு, ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் முதலில் எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்தில், கஷ்தூரிராஜாவின் குடும்பம் இடையில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டது. ரஜினியும் மனம் மாறி தனுசுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டார். இதை பற்றி வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என என்னை வார்த்தையால் கட்டி போட்டு விட்டார். அவருக்கு மதிப்பளித்து இதுநாள் வரை நான் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை. ஆனால் என்னால் ஐஸ்வர்யாவை இதுவரையிலும் மறக்க முடியவில்லை நான் இன்னும் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் ஐஸ்வர்யாவை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளார். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பொருத்தமானவர் அல்ல எனவே என் ஐஸ்வர்யாவை என்னுடனே சேர்த்து வையுங்கள். இவ்வாறு புகார் மனுவை கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கமிஷ்னர் இதை வாங்க மறுத்ததோடு, அவரை மன நலம் பாதிக்கபட்டவர் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் விஷயம் அரசல் புரசலாக வெளியில் கசிய தொடங்கியுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: