10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வேன் டிரைவருக்கு தர்ம அடி

kodumaiமேடவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி இவரது மனைவி தங்கமணி. இவர்களது 10 வயது மகள் லதா (பெயர் மாற்றம்) அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

பெருங்குடியில் உள்ள இவரது பாட்டி சகுந்தலா பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஆயுத பூஜை என்பதால் தனது வியாபாரத்துக்கு உதவி செய்ய முருகனையும், தங்கமணியையும் அழைத்து இருந்தார். அவர்கள் லதாவுடன் பெருங்குடி சென்றனர்.

கடையில் சிறுமியை உட்கார வைத்து விட்டு கணவன்–மனைவி இருவரும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது ஈச்சம் பாக்கத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் கடைக்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார். சிறுமி லதாவை பார்த்ததும் அவனுக்கு காமவெறி ஏற்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து நைசாக பேச்சு கொடுத்தார். வேனில் வருகிறாயா? ஊரை சுற்றிப்பார்க்கலாம் என்றார். லதாவுடன் ஆசையுடன் வேனில் ஏறிக்கொண்டார். உடனே சுரேஷ் வேனை ஓட்டிச்சென்றார். வியாபார பரபரப்பில் பெற்றோர்கள் இதனை கவனிக்கவில்லை.

சுரேஷ் வேனை சோழிங்க நல்லூர் பீச்ரோட்டிக்கு ஓட்டிச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பள்ளியின் பின்புறம் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

சுரேசிடம் இருந்து தப்பிக்க சிறுமி லதா கூச்சல் போட்டார். அந்த சத்தம் கேட்டு அங்கு சிலர் ஓடி வந்தனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுரேசை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட செம்மஞ்சேரி போலீசார் விரைந்து வந்து சுரேசை கைது செய்தனர்.

உதவி கமிஷனர் அஸ்லாம், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் கண்ணன் ஆகியோர் விசாரித்து சுரேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். படுகாயம் அடுத்த லதா பெரும்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: