மறைக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த புலிகளின் ஆயுதங்கள்! படையினர் வசம்

ltte_podo (7)விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கியபோது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்தது குறித்து அடிக்கடி இடம்பெறுவதை காண்பீர்கள். யுத்தம் முடிந்த பின்னர் அவ்வப்போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவற்றில் சில ஆயுதங்களை, அதுவும் லேசில் கொண்டுவரப்பட முடியாத பெரிய ஆயுதங்களை, பெரிய குழிகளில் புதைத்து வைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள். நிலத்தினடியே அந்த ஆயுதங்கள் பழுதாகாது இருக்க சில பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பெரிய ஆயுதங்களை பார்ட், பார்ட்டாக கழட்டி, அதன்மீது கிரீஸ் தடவி, தடித்த பொலிதீனால் சுற்றப்பட்ட நிலையிலேயே தரையடியே புதைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு ஏரியாவிலும் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், எங்கே புதைக்கப்பட்டன என்ற விபரங்கள், அந்தந்த ஏரியாவில் இருந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கே தெரியும் என்ற நிலை இருந்தது. யுத்தம் முடிந்தபின் சரணடைந்த பல ஆயிரக் கணக்கான போராளிகளில், இந்த விபரங்கள் தெரிந்தவர்களும் இருந்தார்கள்.

அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அநேக ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இந்த போட்டோக்கள், வெவ்வேறு இடங்களில், இலங்கை ராணுவத்தால் எடுக்கப்பட்ட போட்டோக்கள். சில போட்டோக்களில், புலிகள் எப்படி பெரிய ஆயுதங்களை பார்ட், பார்ட்டாக கழட்டி, பொலிதீனால் சுற்றப்பட்ட நிலையில் புதைத்தார்கள் என்பதையும் காணலாம். உதாரணமாக, 4-வது 5-வது போட்டோக்களை பார்க்கவும்.

யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, சில ஆயுதங்களை மிக ஆழமாக தோண்டி புதைக்க நேரம் கிடைத்திருக்கும். சில ஆயுதங்களை மறைக்க நேரமே இல்லாமல் அகல வேண்டியிருந்திருக்கும். 1-வது போட்டோவை பாருங்கள், வெறும் செடி கொடிகளால் மறைத்துவிட்டுகூட சென்றிருக்கிறார்கள்.

போட்டோவில் உள்ள சில ஆயுதங்கள், புலிகளிடம் இவையெல்லாம் இருந்தனவா என உங்களை பிரமிக்க வைக்கும்.ltte_podo_jvpnews
ltte_podo (1)ltte_podo (2)ltte_podo (3)ltte_podo (4)ltte_podo (5)ltte_podo (6)ltte_podo (7)ltte_podo (8)ltte_podo (10)ltte_podo (11)ltte_podo (12)ltte_podo (13)ltte_podo (14)ltte_podo (15)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: