கணவருக்கு தெரியாமல் மனைவி 2வது திருமணம்

kurankuநாகர்கோவிலை அடுத்த வடக்கு சூரங்குடி வெள்ளாளன் விளையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் பேயன்குழியை சேர்ந்த ரதிதேவி (31) என்பவருக்கும் 24.5.2010 அன்று திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சுதர்சன் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ‘’ திருமணத்தின்போது எனது பெற்றோர் ரதிதேவிக்கு 10½ பவுன் நகை செய்து அணிவித்தனர். திருமணம் முடிந்த அன்றைய தினம் இரவு எனது மனைவி என்னிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது உன்னுடன் குடும்பம் நடத்தமாட்டேன் என்று கூறினார்.

அதன்பிறகு 16.6.2010 அன்று எனது மனைவியின் ஊரில் திருவிழா நடைபெற இருப்பதாக கூறி ரதிதேவியை அவரது சகோதரி லிசி, சகோதரியின் கணவர் சந்திரகுமார் சேர்ந்து அழைத்துச்சென்று விட்டனர். எனது மனைவி அவளது பெற்றோர் வீட்டிற்கு செல்லும்போது எனது பெற்றோர் அணிவித்த 10½ பவுன் நகையை அணிந்து சென்றார். சிலநாட்களுக்கு பின்னர் எனது மனைவியை அவளது வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன்.

அப்போது அவள் வரமறுத்ததோடு, சகோதரியுடன் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டினார். அதன்பிறகு 7.8.2012 அன்று எனது மனைவியின் சகோதரி லிசி, அவரது கணவர் சந்திரகுமார் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து ரதிதேவிக்கு நாங்கள் கண்டன் விளையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைத்துவிட்டோம் என்று கூறினர்.

மேலும், அவள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறினர். இனிமேல் அவளை குடும்பம் நடத்த அழைத்தால் உன்னை ஆள்வைத்து அடித்துக் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினர்.

என் மனைவி நீதிமன்றத்தின் மூலம் எந்த வித விவாகரத்தும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக 2–ம் திருமணம் செய்துள்ளார். அவளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த சகோதரி, அவரது கணவர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், எனது 10½ பவுன் நகையையும் மீட்டு தரவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: