• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை

tamilnadukolaiபுதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி அருகே உள்ள செங்களாக்குடியை சேர்ந்தவர் துரைராஜ். நாட்டாமை. இவரது மகன்கள் டிரைவர் கார்த்திக் (வயது 30). ராஜேஷ் (26). இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இவரது உறவினரான ராம்குமார் என்பவர் கார்த்திக்கையும், ராஜேசையும் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். கார்த்திக்கும், ராஜேசும் செங்களாக்குடியில் இருந்து கோரையாற்றுக்கு தனி தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் 2 பேரும் கோரையாற்றுக்கு அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது கும்பலாக வந்த சிலர் கார்த்திக்கும், ராஜேசையும் தடுத்து நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர்.

இவர்களை அழைத்து சென்ற ராம்குமாரும், அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 2 பேர் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ரத்தம் வடிந்த படி கிடந்த அவர்கள் 2 பேர் உடலையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொடுர கொலைகள் நடந்தது முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.

அப்போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இதில் அதே ஊரை சேர்ந்த அவர்களின் உறவினரான கணேசன் என்பவர் மகன் ராஜேந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது டெம்போவில் மணல் ஏற்றி செல்லும் போது விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசில் ராஜேசும், கார்த்திக்கும் மாட்டி விட்டுள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கும், கார்த்திக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் ராஜேந்திரன் (வயது 30), ஜெயராம் (26), முத்தழகு (24)ஆகிய 3 பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கொலையாளிகளை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. தலைமையில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், கீரனுர் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் துப்பறியும் நாய் மார்ஷல் புதுக்கோட்டையில் இருந்து வர வழைக்கப்பட்டு துப்பு துலக்கினார்கள். நாய் மார்ஷல் மோப்பம் பிடித்த படி ராஜேந்திரன் வீட்டு முன்பு படுத்துக்கொண்டது.

நள்ளிரவில் நாட்டாண்மை மகன்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் ஆவூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரமாக அந்த பகுதியில் ரோந்து சுற்றியும் வருகிறார்கள். ஆனாலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: