வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண்ணை நிர்வாண படம் பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்

handyஒரு குழந்­தையின் தாயொ­ரு­வரை அவ­ரது சகோ­த­ரிக்கு வெளி­ நா­டொன்றில் தொழில் பெற்றுத் தரு­வ­தாக கூறி வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று பலாத்­கா­ர­மாக நிர்­வா­ண­மாக்கி  புகைப்­படம் எடுத்து அவ­ரது கண­வ­ரிடம் காண்­பிப்­ப­தாகக் கூறி  அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய  முச்­சக்­க­ர­வண்டி சார­தி­யொ­ரு­வரை   ஹப­ரா­துவ மற்றும் காலி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் தேடி வரு­கின்­றனர்.

இப் பெண் கடந்த 10 ஆம் திகதி காலி­யி­லி­ருந்து பாட­சாலை முடி­வ­டைந்த பின்னர் தனது மக­ளுடன் வீட்­டுக்கு வர  ஹப­ரா­துவ பலட்­டு­கஹா சந்­தியில் நின்ற போது முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்த 30 வயது  மதிக்­கத்­தக்க முச்­சக்­க­ர­வண்டி  சாரதி தாயையும் மக­ளையும்  அவர்­க­ளது வீடு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் அழைத்து வந்­துள்ளார்.

முச்­சக்­க­ர­வண்­டியில் வரும் போது தாயும் சார­தியும் சக­ஜ­மாக உரை­யாடிக் கொண்டு வந்­துள்­ளனர். இச் சந்­தர்ப்­பத்தில் அப் பெண் தனது சகோ­த­ரிக்கு வெளி­நாட்டில் வேலை பெற்றுத் தர முடி­யுமா என்று சார­தி­யிடம் கேட்­டுள்ளார். வெளி­நாட்டு வேலை பெற்­றுத்­தர முடியும் எனக்­கூ­றிய  சாரதி புதன்­கி­ழமை காலி பஸ் நிலை­யத்­துக்கு  வரும்­படி அப் பெண்­ணிடம் கூறி­யுள்ளார்.

இதன்­படி கடந்த 11ஆம் திகதி காலி பஸ் நிலை­யத்­துக்கு வந்த பெண்ணை முச்­சக்­க­ர­வண்டி சாரதி காலி தலீபே பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றுக்கு அழைதுச் சென்­றுள்ளார். பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்ற சாரதி  அவரை பல­வந்­த­மாக நிர்­வா­ணப்­ப­டுத்தி ஆபாச படங்­க­ளையும் வீடி­யோ­வையும் காண்­பித்­துள்ளார்.  இதற்­கி­டையில் அப் பெண்ணை நிர்­வா­ணப்­பு­கைப்­படம் எடுத்­த­துடன்  வீடி­யோ­விலும் பதிவு செய்­துள்ளார்.

தமது விருப்­பத்­துக்கு இணங்கா விட்டால் நிர்­வாணப் படங்­களை இணைய தளத்தில் வெளி­யி­டு­வ­தா­கவும் அதை  அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்கும் பொலிஸ் சேவை­யி­லுள்ள அவ­ரது கண­வ­ருக்கும் அனுப்பி வைக்கப் போவ­தாகக் கூறி அப்­பெண்ணை பல­முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சாரதியைக் கைது செய்ய ஹபராதுவ  மற்றும் காலி பொலிஸார் பல முனைகளில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(எஸ்.கே)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: