மனநிலை பாதித்த தங்கை மகனை அடித்து கொலை செய்த தாய்மாமன்

தாய் அடித்து கொலை : வெறிபிடித்த வாலிபர்கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் வர்ஷினி, வயது-32. இவரும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு, கணவன் மனைவிக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு, இவர்களது அரு வயது மகன் அபினேஷ் கோகுல், ஏரிப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் வர்ஷினி வசித்து வந்தார்.

புதன்கிழமை மாலை வர்ஷினியின் தம்பி சூர்யா வயது-23, நெகமம், பூசாரிபட்டியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் தனது காரை கழுவச் சென்றார். அப்போது, குளிக்கலாம் வா என்று அபினேஷ் கோகுலையும், கார் ஓட்டுநர் முருகன் என்பவரையும் சூர்யா தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளனர்.

கார் கழுவி முடிந்த பிறகு முருகன், சூர்யா இருவர் மட்டும் கண்ணீருடன் வீடு திரும்பினர். மகன் காணாதது குறித்துக் வர்ஷினி விளக்கம் கேட்டபோது, அபினேஷ் கோகுல் வாய்க்காலில் குளிக்கும் போது, தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வர்ஷினி கொடுத்த புகாரின்பேரில் கோமங் கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை தொடர்ந்து இரு நாள்களாக நடத்தப்பட்ட தேடுதலில் வியாழக்கிழமை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் மீட்கப் பட்டது.

சிறுவனின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதனால் சூர்யா, முருகனிடம் போலீஸார் (முறைபடி) விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன்னுடைய தங்கை மகன், அபினேஷ் கோகுல் கொஞ்சம் மனநிலை பாதிக்கப் பட்டிருந்த தன் காரணமாகவும், கணவனை பிரிந்து வாழும் தங்கைக்கு அந்த நினைவு முற்றிலும் மறைய வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் இருவரும் சேர்ந்து அபினேஷ் கோகுலை அடித்து கால்வாயில் தூக்கி வீசியதை ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் கொலை குற்றத்து க்காக கைது செய்துள்ளனர்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: