நகை, பணத்துடன் மணப்பெண் மாயம்

marathiராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் காயத்திரி (21). இவருக்கும் வள்ளிமலை அடுத்த வீரந்தாங்கலை சேர்ந்த சிவாவுக்கும் (25). திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்தனர். திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.

இவர்களது திருமணம் (ஞாயிற்றுக்கிழமை) திருவலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இன்று இரவு மாப்பிள்ளை அழைப்பு நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மணப்பெண் காயத்திரி வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்க பணத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடினர். ஆனால் அவரை காணவில்லை.

இது குறித்து மணப்பெண் தந்தை பெருமாள் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்துடன் மாயமான மணப்பெண்னை தேடி வருகின்றனர்.

மணப்பெண் ஓடியதால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: