விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தடையாக உள்ளதாம்

thayarathinaஇலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு விடுதலைப் புலிகளின் வலையமைப்பு சவாலாகவே உள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்னாயக்க தெரிவித்தார். சர்வதேச

பாதுகாப்பு செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு வரவேற்புரையின் போதே இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்ணாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு சர்வதேசத்தில் இருந்து செயற்படுகின்ற விடுதலைப் புலிகளின் வலையமைப்பு சவாலாகவே உள்ளது. இவை இன்று நாட்டிற்கெதிராக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. இருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்தவோ, நாட்டிற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ அனுமதிக்கப் போவதில்லை. தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய பாதுகாப்பு பொறிமுறைகளை கையாண்டு உள்ளோம். நாட்டில் பயங்கரவாதப் போர் முடிவடைந்ததன் பின்னர் நிலையான சமாதானம் மற்றும் அமைதி காணப்பட்ட போதிலும் இலங்கைக்கெதிரான சவால்கள் தொடர்கின்றன. புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களும் தப்பிச்சென்ற புலி உறுப்பினர்களும் இலங்கைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் அரசியல் சமூக மற்றும் பொருளாதார மையங்களை குறிவைத்து செற்படுகின்றனர். அத்துடன் இலங்கைக்கு எதிராக பாரிய மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன் மாத்திரமின்றி இராணுவத்துக்கெதிராக போர்க் குற்றச்சாட்டுகளையும் சுமத்துகின்றனர். இது நாட்டை பிளவுபடுத்தி தமது இலக்குகளை அடைவதற்கான முயற்சி களாகும். ஆகவே, இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: