இலங்கை மந்திரிகளுக்கு நவநீதம் பிள்ளை கண்டனம்

mahinda-rajapaksaஇலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய நவநீதம் பிள்ளை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 7 நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய நவநீதம் பிள்ளை இன்று கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போரின்போது மாயமானவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக இலங்கை அரசு அமைத்த குழுவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவர்களை, ராணுவத்தினர் முன்கூட்டியே சந்தித்து மிரட்டல விடுத்திருக்கிறார்கள். மேலும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், தொடர் அச்சுறுத்தல் என எதேசச்திகாரத்தை நோக்கி இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதியில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களை அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

நான் ஐ.நா.வில் உள்ள தமிழ் பெண் புலி என்று கடந்த இலங்கையின் 3 மந்திரிகள் கூறுகின்றனர். நான் தமிழ் பெண் என்பதால், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதாக எனது நடுநிலை குறித்து கேள்வி எழுப்பினர். இது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது. தனது மந்திரிகள் இத்தகைய அறிக்கை வெளியிட்டதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: