மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன்

polesகோவை ரத்தினபுரி வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 29). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி(23). கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அவர்களது இனிமையான இல்வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை உள்ளது.

தங்கராஜ் அடிக்கடி வேலை தொடர்பாக சென்னை செல்வார். வழக்கம்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு கிளம்பினார். அப்போது ‘நான் வருவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

கணவர் சென்னைக்கு கிளம்பியதும் ஆனந்தி நல்லாம்பாளையத்தில் உள்ள தனது கள்ளக்காதலன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். ‘எனது கணவர் சென்னைக்கு சென்று விட்டார். 3 நாட்கள் கழித்துதான் வருவார். அதுவரை நாம் உல்லாசமாக இருக்கலாம் வா’ என்றார். முத்துக்குமாரும் உடனே புறப்பட்டு வந்தார். தனது ஆசைக்காதலியுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று இரவும் கள்ளக்காதல் ஜோடி உல்லாசத்தில் திளைத்தது. இந்த நிலையில் தனது மனைவியிடம் தங்கராஜ் தகவல் ஏதும் சொல்லாமல் நள்ளிரவு 1 மணிக்கு வந்து வீட்டுக்கதவை தட்டினார். இன்று காலைதான் வருவதாக தங்கராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். நள்ளிரவு வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார். கதவை தட்டுவது யார்? என்று அஞ்சியபடியே கேட்டார். ‘நான் தான் தங்கராஜ்’ என்றதும் ஆனந்திக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆகா வசமாக மாட்டிக்கொண்டேமே என்று கலங்கியபடியே கதவைத்திறந்தார்.

ஆனந்தி அறைகுறை ஆடையுடன் நிற்பதைப்பார்த்த தங்கராஜ் மனதில் சந்தேகம் எழுந்தது. அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கு ஒரு வாலிபரும் அரைகுறை ஆடையில் இருந்தார். ஓட முயன்ற அந்த வாலிபரை பிடித்து தங்கராஜ் சரமாரியாக தாக்கினார். அவரது தலையைப்பிடித்து சுவற்றில் மோதினார். ஆத்திரம் தீராத அவர் டி.வி.பார்க்க பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோலை உடைத்து சரமாரியாக குத்தினார். முத்துக்குமாரும் திருப்பி தாக்கினார்.

கணவன்– கள்ளக்காதலன் இடையே மோதல் நடந்த நேரத்தில் ஆனந்தி தனது குழந்தையை துக்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். முத்துக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பொதுமக்கள் திரண்டதைப்பார்த்ததும் தங்கராஜ் ஓடிவிட்டார்.

சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தங்கராஜை மடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. தங்கராஜ் தாக்கிய முத்துக்குமார் சமையல் அறை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறார். குழந்தையுடன் தலைமறைவான ஆனந்தியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் ரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: