கணவர், பிள்ளைகளை தீயிட்டு எரிக்க முயற்சி: மனைவி கைது

kurankuதிருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட தொழூவூர் நேதாஜி நகரில் வசித்து வருபவர் கன்னியப்பனின் மகன் சுந்தர்ஜி (47). இவர் முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக பெங்களூருவைச் சேர்ந்த சகிலா (37) என்பவரை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டு அவருடன் வாழந்து வந்ததாக கூறப்படுகிறது. முதல் மனைவிக்கு பிறந்த 2 பிள்ளைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சுந்தர்ஜி அவரது மனைவி சகிலா மற்றும் பிள்ளைகள் ஹரிஹரன்ஜி (11), விக்ரம்ஜி (9) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுந்தர்ஜியின் முதுகில் சூடாக உணர்ந்ததால் உடனே எழுந்து பார்த்தபோது முதுகு புறம் தீப்பிடி

த்து  எரிந்தது.மேலும் இரு பிள்ளைகள் மீதும் தீ எரிந்துக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் 2-வது மனைவி மட்டும் தூரமாக அமர்ந்திருந்தார். உடனே சுந்தர் தனது மீதிருந்த தீயையும், பிள்ளைகள் மீது எரிந்த தீயையும் அணைத்தார். இருப்பினும் மூவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இதுகுறித்து சுந்தர்ஜி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சகீலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: