யுவதிகளை நிர்வாணப்படுத்தி வீடியோ படமெடுத்த தேரர்

pikkuயுவ­திகள் இரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி வீடியோ பட­மெ­டுத்து அதனை தனது கண­னியில் சேமித்து வைத்த விகா­ரா­தி­பதி ஒரு­வரை எதிர்­வரும் 27ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பல­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

பெந்­தொட்ட ரந்­தா­கொட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள விஹா­ரை­யொன்றின் விஹா­ரா­தி­பதி ஒரு­வ­ரையே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க பல­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றம் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இரு யுவ­தி­களை நிர்­வா­ணப்­ப­டுத்தி பட­மெ­டுத்து அதனை தனது கண­னியில் குறித்த தேரர் பதிவு செய்­தி­ருந்­த­தாக அவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தனர்.

கண­னியை திருத்­து­வ­தற்­காக ஒரு இடத்­திற்கு கொண்டு சென்று குறித்த தேரர் கொடுத்த போதே இந்த விட­யங்கள் அம்­ப­லத்­துக்கு வந்­தன.

இந்­நி­லையில் குறித்த தேரர் சார்­பாக நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி தேரர் ஆன்­மிக ரீதி­யாகக் தவ­றி­ழைத்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் எழு­தப்­பட்ட சட்­டங்­களின் அடிப்­ப­டையில் அவர் எது­வித தவ­றையும் செய்­ய­வில்­லை­யெ­னவும் வாதிட்டார். இந்­நி­லையில் குறித்த நிர்­வாணப் படங்கள் தொடர்பில் விசேட பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளு­மாறும் அதன் அறிக்­கையை சமர்ப்பிக்கவும் பணித்துள்ளதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேரரை விளக்க மறியலில் வைக்குமாறும் பொலி ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: