மாணவியை கடத்தி உல்லாசமாக இருந்த வாலிபர்

sirumiதிருச்சி துவாக்குடியில் மாணவியை கடத்தி உல்லாசமாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியை அடுத்த துவாக்குடி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 17-ந் தேதி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் சமயபுரம் பஸ் நிலையம் அருகே அந்த மாணவி, ஒரு வாலிபருடன் இருப்பது துவாக்குடி போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சலம் மற்றும் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நெம்மேலியை சேர்ந்த யுவராஜ் (22) என தெரியவந்தது.

அவர் போலீசார் விசாரணையில் கூறியதாவது:-

என் அம்மா என்னை சிறுவயதிலேயே சென்னைக்கு அழைத்து வந்து விட்டார். 9-ம் வகுப்பு வரை படித்தேன். அந்த வயதிலேயே பெண்களை பார்த்தால் எனக்கு உல்லாசமாய் இருக்க தோன்றும். ஒரு சமயத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயன்ற போது அங்கிருந்தவர்கள் என்னை அடித்து விரட்டிவிட்டனர்.

அதன் பின் திருச்சி துவாக்குடி வடக்குமலையில் உள்ள வாட்சுமேன் பாறை அருகே தன் நண்பர்களுடன் தங்கி டிபன் கடை நடத்தி வந்தேன். கடை அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை என் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

அப்போது தான் அந்த மாணவி என் வலையில் சிக்கினார். 6 மாதமாக அவருடன் பழகி வந்தேன். உன்னை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியுடன் வாழ வைக்கிறேன் என கூறி கடந்த மாதம் 17-ந் தேதி அழைத்து சென்றேன்.

என் நண்பர்கள் உதவியுடன் காவேரியை அழைத்து கொண்டு சென்னை வந்தேன். சென்னை சைதாப்பேட்டையில் நண்பர் வீட்டில் தங்கி அந்த பெண்ணுடன் உல்லாசமாய் இருந்தேன்.

அதன்பின் பணம் இல்லாததால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள நண்பர் சதீஸ் வீட்டிற்கு வந்தேன். அப்போது தான் போலீசார் என்னை தேடுவதை அறிந்தேன். உடனே அந்த பெண்ணை அழைத்து கொண்டு வேளாங்கண்ணி சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி உல்லாசமாய் இருந்தேன்.

பின் சென்னை கோவை, சேலம் ஆகிய இடங்களில் அந்த பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாய் இருந்தேன். இதற்கு மேல் சுற்ற முடியாது என முடிவெடுத்த நான் அந்த பெண்ணை சமயபுரத்தில் கும்பலோடு கும்பலாக விட்டுவிட்டு தலைமறைவாகலாம் என நினைத்த போது போலீசில் பிடிபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கட்டாயபடுத்தி உல்லாசமாக இருந்ததாக யுவராஜை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: