• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

எருமைக்கு பிரிவுபசார விழா

erumaiஅரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிங்வாகால் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை வளர்த்து வந்தார். அதற்கு லட்சுமி என பெயரிட்டு அன்புடன் பராமரித்து வந்தார். இது நாள்  ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறந்தது.

மேலும், பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் அதிக அளவு பால் வழங்கியது உள்ளிட்ட  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.3 லட்சம் பரிசை வென்றது. எனவே இந்த எருமைமாடு ரூ.25 லட்சத்துக்கு சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அதை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் சார்பாஞ்ச் என்பவர்   விலைக்கு வாங்கியுள்ளார். அந்த மாட்டை தனது வீட்டுக்கு அழைத்து செல்ல நேற்று சின்சுவாஸ் கிராமத்துக்கு வந்தார். இதற்கிடையே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தனது அன்பான எருமை மாட்டுக்கு விவசாயி கபூர் சிங் பிரிவுபசார விழா நடத்தினார். அதற்காக அந்த மாட்டுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை அணிவித்து  அலங்கரித்தார்.erumai

தனது கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார். மேலும்  அரியானா மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என 2 ஆயிரம் பேரை அழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்து கொடுத்தார். அதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவானது. இந்த நிகழ்ச்சியை கிராம மக்கள், ஆச்சரியத்துடன் கண்டு வியந்தனர். அரியானா மாநிலத்தின் முர்ரா எருமை மாடு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை நாளொன்றுக்கு 32 கிலோ அளவில் பால் கறக்கும். ரூ.25 லட்சத்துக்கு விற்கப்பட்ட இந்த எருமை மாடும் முர்ரா வகையை சார்ந்ததாகும்.

இதை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்துக்கு கபூர்சிங் விலைக்கு வாங்கினார். தற்போது இது 3-வது தடவை கர்ப்பமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கன்று ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இது ஈன்ற ஆண் எருமை கன்று ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: