மந்திரிக்கு எதிராக பேஸ்புக்கில் தகவல்

indiaஉத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மசூதியின் சுற்றுச்சுவர் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அதனை இடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி உத்தரவிட்டார்.

இதனால் இன ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதாக கூறி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில், துர்கா சக்திக்கு ஆதரவாக தலித் அறிஞரும், எழுத்தாளருமான கமால் பார்தி, தனது பேஸ்புக் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், துர்கா சக்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அவர் கண்டித்துள்ளார்.india

மேலும், “ராம்புரில் உள்ள ஒரு மதரசாவை சமீபத்தில் அதிகாரிகள் இடித்ததுடன், அதன் மேலாளரை கைது செய்துள்ளனர். ஆனால், இதுதொடர்பாக யாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. ஏனென்றால் அதிகாரத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஆசம் கானின் உத்தரவால் அந்த மசூதி இடிக்கப்பட்டுள்ளது” என்று கமால் பார்தி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மந்திரிக்கு எதிராக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டிருப்பது இரு சமூகத்தினரிடையே வேற்றுமையை வளர்க்கும் என்று மந்திரியின் உதவியாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துர்காவின் ஆதரவாளர் கமால் பார்தியை இன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: