ஜேம்ஸ் வசந்தனை தீவிரவாதிகள் போல் கைது செய்த தமிழக காவல்துறை: குட்டு அம்பலம்

Tamil-Daily-News_6427729130இசையமைப்பாளரும் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் 68 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக தொல்லைப் படுத்தியதாக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறது காவல்துறை.

சென்னைக் கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டின் பேரில் சுமார் 40 -ம் மேற்பட்ட காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்திருக்கிறார்கள்.

உண்மையில் அந்த ஏரியா வாசிகள் ஏதோ தீவீரவாதிகள்தான் நுழைந்து விட்டார்கள் என்று பயந்து விட்டார்காளாம். சரி விஷயத்திற்கு வருவோம்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராதா வேணு பிரசாத் என்ற 65 வயது பெண்மணியை மிரட்டியதாகவும், அவரை நோக்கி ஆபாச செய்கைகளை செய்ததாகவும் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்திருக்கிறது போலீஸ்.

அறியப்பட்ட இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் மீது இதுவரை இப்படியான குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில் திடீரென பாலியல் புகார் எழுந்ததால் விசாரித்த போது அதிர்ச்சியாக இருந்தது இப்படியுமா செய்வார்கள் என்று தோன்றியது.

நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு கட்டுகிறார். அந்த ஏரியாவில் குடியிருக்கும் ராதா வேணு பிரசாத் ஜேம்ஸ்சிடம் வந்து ‘’ இந்த இடத்தை நான் என் மகனுக்காக வாங்கி வீடு கட்டலாம் என்றிருந்தேன் நீங்கள் வாங்கி விட்டீர்கள்.

பரவாயில்லை அதை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று சொல்ல ஜேம்ஸ் வசந்தன் மறுக்க ராதாவால் அவருக்கு தொல்லைகள் ஏற்பட்டிருக்கிறது கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனை நடப்பதாகத் தெரிகிறது.jemes

பள்ளியிலிருந்து ஒரு முறை பிள்ளைகளை அவரது மனைவி அழைத்து வந்த பொது காரை கொண்டு போய் ஏற்று வது சண்டித்தனம் செய்திருக்கிறார் இந்த ராதா. ஜேம்ஸ் வசந்தனும் அவ்வப்போது எதிர்ப்புக் காட்டியிருக்கிறார் இந்நிலையில் ராதாவின் மகன் லண்டனின் உள்ள இந்திய ஹை கமிஷனில் உயரதிகாரியாம்.

தவிரவும் ராதாவுக்கு ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளையும் பழக்கமாம். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காஞ்சிபுரம் போலீசாரை ஜேம்ஸ் மீது ஏவ அவர்கள் ஜேம்ஸ் வசந்தன் மீது கைவைக்க யோசித்திருக்கிறார்கள். பின்னர்தான் ராதா சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கு (ஜார்ஜ் ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது) தன் மகன் மூலமும், வேறு அதிகாரிகள் மூலமும் அழுத்தம் கொடுத்து மலையாள லாபி மூலம் தவறே செய்யாத நிராபராதியான ஜேம்ஸ் வசந்தனை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்காள்.

வசந்தனுக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம். இது பற்றி தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சென்னை காவல்துறை இந்த விஷயத்தில் தவறிழைத்தாரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

தவிறழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திரைத்துறையினரும் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வசந்தனுக்கு உதவ வேண்டும்.

– அருள் எழிலன் –

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: