அளவுக்கு அதிகமாக மது குடித்த ராணுவ வீரர்–கள்ளக்காதலி மூச்சுதிணறி சாவு

mathuஆவடி கோவில் பதாகை கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 73) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் சுப்பிரமணிக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வசித்து வந்த ராணிக்கும் (63) பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் மகன்களை பிரிந்து தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.

இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்தது. சுப்பிரமணி ஓய்வூதிய பணத்தில் ஜாலியாக காதலியுடன் உல்லாச வாழ்க்கை நடத்தினர். நேற்று மாலை 2 பேரும் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்தினர்.

நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் மாடியில் சென்று பார்த்தனர். அவர்கள் மது அருந்திய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுப்பிரமணி–ராணி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது 4 காலி குவாட்டர் பாட்டில்களும், மற்றொரு குவாட்டர் பாட்டிலில் பாதி அளவு மட்டும் மது இருந்ததை கைப்பற்றினர். அளவுக்கு அதிகமான மது போதையில் 2 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிந்தது. அவர்களின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோ தனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சுப்பிரமணியின் உடலை மட்டும் ஒப்படைக்கும்படி அவரது மகன் ராஜ்குமார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

ராணியின் மகன்கள் எங்கு உள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. அவர்களிடம் இதுபற்றி தெரிவிக்க போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: