லிபிய சிறை­யி­லி­ருந்து 1,000 கைதிகள் தப்­பி­யோ­ட்­டம்

Libyaலிபிய தலைநகர் திரிபோலி அருகே இருக்கும் சிறைச்சாலையிலிருந்து 1000க்கும் மேற்பட்ட சிறை­க்கை­திகள்  தப்பி ஓடியுள்­ள­தாக சிறை அதி­காரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பென்காஷி நகரில் நேற்று  முன்­தி­னம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் ஈடுபட்டுள்­ளனர். இதேபோல் அல் குபியா சிறையிலும் கைதிகள் மத்தியில் கலவரம் வெடித்துள்­ளது. இதற்கிடையில் சிறையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களது நண்­பர்­களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டுள்­ளனர்.

இதன்போது, சிறைக் கதவுகளை உடைத்து ஏராளமான கைதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றி­யுள்­ளனர். இந்த சம்பவத்தில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடியுள்­ள­னர் என அதிகாரிகள் தெரிவித்துள்­ளனர்.Libya

ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகளும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்­ளனர். அவர்களை பிடிக்கப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

கைதிகள் எல்லை தாண்டிச் செல்லாமல் இருக்க லிபிய நாட்டின் எகிப்து எல்லையை மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் லிபியாவில் பதற்றம் அதிகரித்துள்ள­து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: