• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

சிம்பு ஹன்சிகா காதல் பற்றி திடுக்கிடும் தகவல்

 

hansika_simbu0தமிழ் திரையுலகில் சிம்பு மற்றும் ஹன்சிகா காதல் குறித்து பல விமர்சனங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம் என பகிரங்மாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.

 

சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில்அந்தப் பேட்டி வெளியான நாள் முதல் சிம்பு, ஹன்சிகா வட்டாரங்களில் அனல் பறந்துள்ளது. அதுநாள் வரை வதந்தியாகவும் கிசுகிசுவாகவும் இருந்த சிம்பு, ஹன்சிகா காதல் தகவல் உண்மை என அதன் பிறகே உறுதியானது.

 

சிம்பு ஹன்சிகா காதல் வயப்பட காரணமான வாலு: வாலு படத்தில்தான் சிம்பு ஹன்சிகா முதன்முதலில் சேர்ந்து நடிப்பதற்காக ஒப்பந்தமானார்கள். 2012 யூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பின் முதல் காட்சியில் ஹன்சிகாவிடம் சிம்பு தன்னுடைய காதலைச் சொல்ல வேண்டும். ஆனால் முதல் காட்சியிலேயே இவர்கள் இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ளவில்லை.

 

ஏனெனில் அந்தப் படத்தில் நடிப்பது என கமிட் ஆனதுமே சிம்புவிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு ஹன்சிகாவுக்கு உலகமே அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறது. இதனால் சிம்புவை ஸ்பாட்டில் எதிர்கொண்டாலே ஒதுங்கிவிடுவார் ஹன்சிகா. சிம்புவும் இதனை கண்டுகொள்ளாமல் விலகியே இருக்க படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி கிடைக்காமல் தவித்திருக்கிறார்கள் படப் பிடிப்புக் குழுவினர்.

 

இத்தனை பட்ஜெட் படத்துக்கு இந்த ட்ரீட்மென்ட் சரிவராது என்ற முடிவுக்கு வந்த படக்குழுவினர் சிம்புவின் நண்பர்கள் மூலம் ஹன்சிகாவிடம் சிம்புவைப் பற்றி நல்லவிதமாகப் பேசி அவர் மனதில் மாற்றத்தை உண்டாக்கினார்கள். அதன் பின்பு படப்பிடிப்புகளில் சிம்புவுடன் இயல்பாகப் பழகினார் ஹன்சிகா. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் கொமராவுக்குப் பின்னால் கெமிஸ்ட்ரி பற்றத் தொடங்கியதுடன் காதலும் ஆரம்பமானது.nay

 

காதலுக்காக நாடகமாடிய சிம்பு: இந்நிலையில் சின்னச் சின்ன எதிர்ப்புகளுக்கே நயன்தாராவுடனான காதல் பலியானதால் இப்போதைய காதல் அத்தியாயத்தில் எந்த திகீர் திருப்பமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் சிம்பு.nayanthara

 

அதே சமயம் சிம்பு வீட்டில் வேலூரைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து வைத்துவிட்டு அவரை திருமணத்துக்கு நெருக்கினர். அந்தத் திருமணப் பேச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே இமயமலைக்குப் போகிறேன் ஆன்மிகத்தில் ஈடுபடப்போகிறேன் என்றெல்லாம் பப்ளிகுட்டியில் இறங்கினார். எதிர்பார்த்தது போலவே சிம்புவின் வீட்டில் திருமணப் பேச்சு வலுவிழந்து போனது.

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹன்சிகாவின் அம்மா: அனைத்தும் அமைதியாக திட்டமிட்டது போல பயணித்த நேரத்தில் எதிர்பார்க்காத திருப்பமாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபமாக ஹன்சிகா நடித்த படங்கள் ஹிட்டாகத் தொடங்கி குட்டி குஷ்பு என்ற அந்தஸ்துடன் நம்பர்-1 பந்தயப் பட்டியலில் முந்துகிறார். 22 வயதில் கேரியர் சூடு பிடிக்கும் சமயம் இந்தக் காதல் தேவையா என்பதே மோனா மோத்வானியின் கவலை. இதனால் எப்போதும் செல்ல மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்காத மோனா ஹன்சிகாவின் இந்தக் காதல் விருப்பத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

 

ஹன்சிகாவிடம் பொறுமையாக இருக்கும் சிம்பு: ஹன்சிகா விஷயத்தில் சிம்பு அதுவரை மிகவும் பொறுமையாகத்தான் இருந்தார். மோனா மோத்வானி தங்கள் காதல் குறித்துக் கோபம் காட்டியபோதும் அந்தப் பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆனால் அடுத்தடுத்து ஹன்சிகா புதுப் புதுப் படங்களில் கமிட் ஆனதாக வந்த செய்திகள் சிம்புவை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டுசென்றது.

 

அதிலும் தனது எதிர் முகாமைச் சேர்ந்த ஒருவருடன் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக வந்த தகவல் தான் சிம்புவை ஏகத்துக்கும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘எனக்கு எதுவும் தெரியாது… எல்லாம் அம்மாதான் என்று ஹன்சிகா சொல்ல என்ன செய்வதென்று தெரியவில்லை சிம்புவுக்கு. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சின்னச் சின்ன உரசல்கள் வந்தாலும் அது விஸ்வரூபம் எடுக்காமல் பார்த்துக்கொண்டார் சிம்பு.

 

நாங்கள் பிரிந்துவிட்டோம்-ஹன்சிகா:  இந்தப் பரபரப்புகளுக்கு இடையில் மன சஞ்சலத்துடன் விகடனுக்கு அளித்த பேட்டியில் முதன்முறையாக சிம்பு பற்றிய கேள்விக்குக் கொஞ்சம் பதில் சொன்னார் ஹன்சிகா. ஆமாம் ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டோம்னே வெச்சுக்கங்க என்று ஹன்சிகா சொல்லியது சிம்புவை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.

 

ஒருவேளை அம்மா சொல்லித்தான் ஹன்சிகா அந்தப் பேட்டியைக் கொடுத்திருப்பாரோ’ என்ற கோபம் சிம்புவுக்கு. இதனைத் தொடந்து உடனடியாகத் தங்கள் காதலை பகிரங்கப்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்தார் சிம்பு.

 

அதன் பின்பு சிம்புவும் ஹன்சிகாவும் தத்தமது ட்விட்டர் அக்கவுன்ட்டில் ஆமாம் நாங்கள் காதலில் இருக்கிறோம். விரைவில் திருமணம். ஆனால் அது எங்கள் பெர்சனல் என்று சொல்லிவைத்தது போல ஸ்டேட்டஸ் போட்டார்கள். இது பலப் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து இருவருக்கும் இடையிலான காதலை உறுதி செய்திருக்கிறது.

 

இது குறித்து ஹன்சிகாவின் அம்மா மோனா கூறுகையில், நான் காதலுக்கு எதிரி கிடையாது. ஆனால் பல வருடப் போராட்டத்துக்குப் பின்பு ஹன்சிகாவுக்கு இப்போதுதான் சினிமாவில் நல்ல இடம் கிடைச்சிருக்கு. ஐந்து படங்கள் கமிட் ஆகியிருக்கு. இந்த நேரத்தில் காதல், கல்யாணம்னு பேச்சு வந்தாலே கேரியர் பாதிக்கப்படும். அதனால் தான் இன்னும் ஐந்து வருடத்திற்கு திருமணம் இல்லைன்னு இப்போ ஹன்சிகா முடிவெடுத்திருக்காள். சிம்பு வீட்லயும் இந்த ஏற்பாட்டுக்கு ஓ.கே சொல்வாங்கனு நம்புகிறேன் என சுருக்கமாகப் பேசினார்.

 

மீண்டும் காதலை ஒப்புக்கொண்ட ஹன்சிகா: இதனைத் தொடர்ந்து ஹன்சிகாவிடமும் பேசினோம். ஒரே வாரத்தில் அவருடைய மனநிலையிலும் கடலளவு மாற்றம். போன வாரம்தான் காதலை மறுத்தீர்கள். இப்போது ட்விட்டரில் நீங்களே சிம்புவுடனான காதலை உறுதி செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் என்னுடைய எதிர்காலத் திட்டங்கள் பத்தி மட்டுமே பேச விரும்புகிறேன்.

 

மேலும் என் காதல் குறித்து பேச விரும்பவில்லை. அது என் பிரைவசி. அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் திருமணம்னு இப்போ முடிவெடுத்து இருக்கேன் என்றார். ஆனால் சிம்பு தன் ஸ்டேட்டஸில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார் என்று கேட்டால் அவர் எழுதினதை அப்படிப் புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்? நான் என் கேரியரில் கவனம் செலுத்துறேன். அவரும் அவரோட கேரியரில் தீவிரமா இருக்கார்.

 

கேரியர்தான் முக்கியம்- திருமணம் இப்போ இல்லை: இப்போதைக்கு எங்க ரெண்டு பேருக்குமே கேரியர்தான் முக்கியம். நான் நிகழ்காலத்தில் வாழ்பவள். இந்த நொடியில் வாழ்பவள். எப்பவும் பாஸ்ட் பத்திக் கவலைப்பட மாட்டேன். எனக்கும் சிம்புவுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கு. நாங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறோம். அது போதும் எனக்கு என்றார்.

 

இது குறித்து சிம்புவிடம் கேட்டால் கல்யாணம் செஞ்சுக்கிற அளவுக்கு நெருக்கமா இருக்கோம்னு உங்களுக்கே தெரியுதுல்ல சார்.நானும் ஹன்சிகாவும் காதலிக்கிறோம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிப்போம். ஆனா அது எவ்வளவு சீக்கிரம்னு தெரியாது. இப்போ வேற வேற வேலைகள்ல பரபரப்பாக இருக்கின்றேன். நானே இன்னும் ஓப்பனா உங்ககிட்ட பேசுறேன். அதுவரை நாங்கள் எங்கள் காதலை அனுபவிக்கிறோமே என்கிறார் சிம்பு.

hansika_simbu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: