பேஸ்புக் மூலம் பழக்கமான மாணவியை 3 பேர் கற்பழிப்பு

kodumaiஉத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த சனிக்கிழமை அன்று பிளஸ் 2 மாணவியை, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று, ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர்கள், போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பேஸ்புக் மூலம் அந்த பெண்ணுக்கு பழக்கமான நண்பர் மற்றும் 3 பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த பேஸ்புக் நண்பர் ஷோபித் குர்ஜார், அமித் பாதனா, அவரது கார் டிரைவர் ஆசாத் சிங் குஜ்ஜார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். 4-வது குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.kodumai

கைது செய்யப்பட்ட 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் கோர்ட் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் திட்டினர். இத்தகைய கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொடங்க விட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் அவர்களை வழக்கறிஞர்கள் கோபத்தில் தாக்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், குற்றவாளிகளை அவசரம் அவசரமாக வெளியே கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: