தாயையும் மகளையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய தோட்ட முகாமையாளர்

கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகிக்கும் இருவர் கைதுஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகளையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிசார் தெரிவித்தனர்.

55 வயதுடைய தோட்ட முகாமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

வண்ணாத்திவில்லு ரால்மடு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வந்த 39 வயதுடைய தாய் ஒருவரும் 13 வயதுடைய அவரது மகளுமே இவ்வாறு முகாமையாளரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.

இவ்விருவரும் குறித்த முகாமையாளரின் பராமரிப்பில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதியில் வசித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட தாய் அத்தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ள நிலையில் அவரது மகளான சிறுமி தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு தாயுடன் வீட்டில் இருந்துள்ளாள்.

இவ்வாறிருக்கையில் கடந்த மே மாதம் தொடக்கம் சந்தேக நபர் அப்பெண்ணை மரண அச்சுறுத்தலுக்குள்ளாக்கி தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதோடு அவரது மகளான சிறுமியையும் இக்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்தேக நபரின் இந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அப்பெண் இச்சம்பவத்தினை வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தாயும், மகளும் வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: