• RSS தெரியாத செய்தியோடை

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS tharavu

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS kadukathi.com

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • RSS சினிமா நியூஸ்

    • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
  • More than a Blog Aggregator
  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 270 other followers

  • xxx

  • Advertisements

விபூதி, பொட்டு வைக்கத் தடை விதித்த பள்ளி

vathiகோவை மாவட்டம், அன்னூர் உள்ள எல்லப்பம்பாளையத்தில் தனியார் ஒருவரால் நடத்தப்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாலர் வகுப்பு முதல் 4-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது.

இங்கு, 350 குழந்தைகள் படிக்கின்றனர். இந் நிலையில், பள்ளிக்கு வரும் குழந்தைகள் விபூதி, குங்குமம், பொட்டு மற்றும் சிலுவை, பர்தா அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கம் பள்ளி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு குழந்தைகளின் பெற்றோர்கள் கடந்த சிலவருடங்களாகவே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், புதன்கிழமை அப்பள்ளியில் படிக்கும் ஹரிஹரன் என்ற மாணவருக்கு கண்ணின் மேல் பகுதியில் விளையாட்டின்போது அடிபட்டுள்ளது. இதை உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்காமல், பள்ளி நிர்வாகம் அவரை பேருந்தில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பிறகு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளியின் பெரும்பாலான தடுப்புச் சுவர்கள் “பைபர் போர்டு’ கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம். இவற்றைக் கண்டித்து வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் பெற்றோர்கள் 100 பேர் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அன்னூர் போலீஸார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். இருப்பினும் பெற்றோர்கள் முற்றுகையைக் கைவிடவில்லை. பிற்பகல் 2 மணி வரை முற்றுகை நீடித்தது.

அதைத் தொடர்ந்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சம்பவ இடத்துக்குச் சென்று போதுமக்களுடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பெற்றோர்கள் தங்களது புகார்களைத் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகமும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இறுதியில், விபூதி, பொட்டு வைப்பது அவரவர் மதம் சார்ந்த உரிமை; அவற்றைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. பைபர் போர்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியின் சுற்று சுவர்களை விரைவில் மாற்றியமைக்க வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எச்சரித்ததை அடுத்து பெற்றோர்கள் முற்றுகையை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சார்பில் அன்னூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: