இளவரசன் மரணத்தில் உண்மை இப்போது அம்பலமானது

ilavarasan-murderஇளவரசன் தற்கொலை விவகாரத்தில் பா.ம.க. மீது பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், மருத்துவ அறிக்கை தற்போது உண்மை அம்பலத்துக்கு கொண்டுவந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இரண்டாவது உடற்கூறு ஆய்வறிக்கையை  டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், இளவரசன் தற்கொலை குறித்த செய்தி வெளியானதுமே, அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல், இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சிதான் என்று  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றஞ்சாற்றி சிலுவையில் அறைந்தன.ilavarasan-murder

இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், இளவரசனையும், திவ்யாவையும் பாட்டாளி மக்கள் கட்சியினர்  பிரித்ததால்தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தரப்பினரும் வதந்திகளை பரப்பினர். ஆனால், உண்மை இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: