மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து விற்ற காமுகன்

கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகிக்கும் இருவர் கைதுமத்தியபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் தனியாக இருந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து விற்பனை செய்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்தவர் தர்மேந்திரா ஜெயின். இவர் மீது இவரது மனைவி பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளில் தர்மேந்திரா நடித்து, அவற்றை வீடியோ சி.டி.களாக்கி விற்பனை செய்து வருவதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தர்மேந்திரா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தன்னுடன் தனிமையில் இருந்த அந்தரங்க காட்சிகளையும் தனக்கு தெரியாமல் தர்மேந்திரா படம் பிடித்து விற்பனை செய்தது பற்றி அறிந்துக்கொண்ட அந்த பெண் ஆதாரங்களுடன் போலீசில் மீண்டும் புகார் அளித்தார்.

இதனையடுத்து, தர்மேந்திராவின் ஏற்றுமதி அலுவலகத்தை சோதனை செய்த போலீசார் அங்கு ஏராளமான ஆபாச சி.டி.க்களை கைப்பற்றினர்.

அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக தர்மேந்திரா கூறவே போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

கட்டிய மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து விற்ற அந்த காமுகனின் ஈனச் செயல் நாக்பூர் வாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: