பர்மிய பின்லாடன் பௌத்த பயங்கரவாதம்

time_magazineஉலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம்.

இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் பர்மிய பௌத்த வன்முறைக் கும்பலின் தலைவர் விராது தேரரின் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து, ஆசியா நாடுகளில் பரவி வரும்  பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் கட்டுரையொன்றும் வரைந்துள்ளது.

மேலும் பர்மிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் இவரை பர்மிய பின்லாடன் என்றும் அப்பத்திரிகை வர்ணித்துள்ளது.

இலங்கையில் செயற்படும் பொது பல சேனா அமைப்பும் இந்த விராது தேரரின் 969 முன்னணியைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.time_magazine

 

கடந்த பொசோன் போயா தினத்தன்று பௌத்த பிக்கு ஒருவர் போதையில் நடனமாடிய குற்றத்துக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புனித பொசன் போயா தினத்தில் குடித்து விட்டு நடனம் ஆடியுள்ளார்.

இந்த பௌத்த தேரர் தெலியாகொன்ன பிரதேசத்தில் உள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்னால் சிறுவர்கள் கண்டுகளிக்க நடனம் ஆடியுள்ளார்.

இது தொடர்பாக குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பௌத்த பிக்கு கைது செய்யபட்டு குருநாகல் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறும் குருநாகல் மஜிஸ்ரேட் நீதிவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவு இட்டுள்ளார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: