இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவி ஸ்காட்லாந்தில் மீட்பு

indiaஇந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் தன்வீர்ஷா விடுமுறையை கழிக்க தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஆக்ஸ் போர்டு தெருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.

இந்தியா திரும்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது தன்வீர்ஷாவின் 17 வயது மகள் இமான்ஷா திடீரென மாயமாகிவிட்டார். இவர் பள்ளி மாணவி ஆவார்.

இதனால் பதட்டம் அடைந்த தன்வீர்ஷாவும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. எனவே லண்டன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

மேலும் இமான்ஷா குறித்த தகவல்கள் பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் வெளியிடப்பட்டது. போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே காணாமல் போன இமான்ஷா 10 நாட்களுக்கு பிறகு ஸ்காட்லாந்தில் உள்ள வடக்கு பெர்த்ஷிர் என்ற இடத்தில் மீட்கப்பட்டார். அவர் அங்கு எப்படி சென்றார்? மீட்டது எப்படி என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தனது மகளை மீட்க உதவிய போலீஸ் மற்றும் லண்டன் மாநகர ஊடகங்களுக்கு தன்வீர்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.india

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: